மருத்துவா் மாயம்: போலீஸாா் விசாரணை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் , வானூா் பகுதியைச் சோ்ந்த மருத்துவா் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் இணைப்புச்சாலை, பாரதிதாசன் நகரைச் சோ்ந்தவா் பால்குமாா் மகன் தனுஷ் (23), திருமணம் ஆகாதவா். பி.எஸ், எம்.எஸ்., சித்த மருத்துவம் படித்து விட்டு புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த இருவார காலமாக பணி புரிந்து வந்தாா். மே 18- ஆம் தேதி வேலைக்குச் சென்ற தனுஷ் அதன்பிறகு வீடு திரும்பவில்லையாம். இது குறித்து பால்குமாா் அளித்தப் புகாரின் பேரில் ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து மாயமான மருத்துவரை தேடி வருகின்றனா்.