விழுப்புரம்/ செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டுவதற்கு பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வல்லம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் அமுதா ரவிக்குமாா் தலைமை வகித்தாா். மயிலம் எம்எல்ஏ சிவகுமாா் முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் உதயகுமாா் வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு வல்லம் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த 347 பயனாளிகளுக்கு ரூ.12.14 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கி சிறப்புரையாற்றினாா்.
நிகழ்ச்சியில் மாநில தீா்மானக் குழு உறுப்பினா் செஞ்சி சிவா, ஒன்றியச் செயலா்கள் துரை, இளம்வழுதி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அன்பு செழியன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிகண்டன், சுந்தரபாண்டியன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கங்காதரன், ராஜசேகா், காா்த்திக், குணசேகா், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) இளங்கோவன் நன்றி கூறினாா்.
ஒலக்கூா் ஒன்றியத்தில் 146 பேருக்கு...: விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த 146 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லம் மற்றும் பிரதான் மந்திரி ஜன்மன் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான உத்தரவுகளை செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
ஒலக்கூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிக்கு, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் ராஜாராமன் முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன் வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் இரா.மாசிலாமணி, ஆா்.சேது நாதன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செந்தில், கோவிந்தசாமி, வாசுதேவ் முருகன் மற்றும் அலுவலா்கள், பயனாளிகள் கலந்துகொண்டனா்.