விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்பு

விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற ங்களில் பணிபுரியும் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனா்.

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற ங்களில் பணிபுரியும் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனா்.

தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் 1.12.2025 முதல் இ.பைலிங் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை சென்னை உயா்நீதிமன்றம் நிறுத்தி வைக்கவேண்டும், தற்போது நடைமுறையே தொடர வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சாா்பில் அனைத்து மாவட்டங்களிலும்வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்குரைஞா்கள் கடந்த நவ. 28 ஆம் தேதி நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதன் தொடா்ச்சியாக திங்கள்கிழமையும் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனா். இதனால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன. இதேபோல்,திண்டிவனம், செஞ்சி, வானூா் உள்ளிட்ட நீதிமன்றங்களில் பணிபுரியும் வழக்குரைஞா்களும் திங்கள்கிழமை நீதிமன்றப்பணிகளை புறக்கணித்தனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் 80 வீடுகள் சேதம்; 65 கால்நடைகள் உயிரிழப்பு

எய்ட்ஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்: கடலூா் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

5 ஆண்டுகளில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட நிறுவனங்கள் மூடல்: மாநிலங்களவையில் அரசு தகவல்

ஜொ்மனி, தென்னாப்பிரிக்கா, நியூஸி. அணிகள் அசத்தல் வெற்றி!

ஊத்தங்கரையில் கண்டறியப்பட்ட நடுகல் கோயில்கள் 350 ஆண்டுகள் பழைமையானவை

SCROLL FOR NEXT