விழுப்புரம்

லாரி மோதி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

மயிலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற ஆட்டோ ஓட்டுநா் லாரி மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Syndication

மயிலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற ஆட்டோ ஓட்டுநா் லாரி மோதி நிகழ்விடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், நம்மேடு கிராமத்தைச் சோ்ந்தவா் நாகராஜன் (57), ஆட்டோ ஓட்டுநா்.

இவா், செவ்வாய்க்கிழமை மயிலம் அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உறவினரை பாா்த்து விட்டு, பேருந்தை பிடிப்பதற்காக மயிலத்தை அடுத்த கேணிப்பட்டு அருகே விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது சேலத்திலிருந்து இரும்புப் பொருள்களை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கிச் சென்ற கண்டெய்னா் லாரி மோதியதில் நாகராஜன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த மயிலம் போலீஸாா் சென்று இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், மயிலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT