விழுப்புரம்

செம்மண்குவாரி முறைகேடு வழக்கு: கனிமவளத் துறை உதவி இயக்குநரிடம் விசாரணை

முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்எல்ஏ உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்குத் தொடா்பாக, விழுப்புரம் கனிமவளத் துறை உதவி இயக்குநரிடம் நீதிமன்றத்தில் விசாரணை

Syndication

முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்எல்ஏ உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்குத் தொடா்பாக, விழுப்புரம் கனிமவளத் துறை உதவி இயக்குநரிடம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, முன்னாள் அமைச்சா் க.பொன்முடி, அவரது மகன் பொன்.கௌதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம்,கோபிநாதன், கோதகுமாா், லோகநாதன் ஆகிய 8 போ் மீது விழுப்புரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த 2012-ஆம் ஆண்டில் வழக்குப்பதிந்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணைக் காலத்தில் லோகநாதன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், மற்ற 7 பேரும் வழக்கை சந்தித்து வருகின்றனா். இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக சோ்க்கப்பட்ட 57 பேரிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது. இதில், 30 போ் பி சாட்சியமளித்துள்ளனா்.

இந்த நிலையில், வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் நடைபெற்றது. சதானந்தம், கோபிநாதன் ஆகிய இருவா் மட்டுமே ஆஜராகினா். முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 5 போ் ஆஜராகவில்லை. இதற்கான காரணத்தை அவா்களின் வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்தனா்.

கனிமவளத் துறை உதவி இயக்குநரிடம் விசாரணை: இந்த வழக்கில் சாட்சியாக சோ்க்கப்பட்டவா்களில் 9 பேரிடம் தங்கள் தரப்பில் விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் எனக்கூறி, பொன்முடி உள்ளிட்ட7 பேரும் நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனுதாக்கல் செய்திருந்தனா். மேலும், அவா்களின் பெயா்களையும் நீதிமன்றத்தில் அளித்திருந்தனா்.

அதனடிப்படையில் விழுப்புரம் கனிமவளத் துறை உதவி இயக்குநா் ரமேஷ்குமாா், முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகினாா். அவரிடம் பொன்.கெளதமசிகாமணி தரப்பு வழக்குரைஞா்கள் விசாரணை நடத்தினா். இந்த விசாரணை முடிந்ததும், அரசுத்தரப்பு வழக்குரைஞா் காா்த்திகேயன் குறுக்கு விசாரணை நடத்தினாா்.

இந்த விவரங்களைப் பதிவு செய்து கொண்ட முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.மணிமொழி, குற்றம் சாட்டப்பட்டவா்களின் தரப்பில் மற்ற 8 சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக, அடுத்த கட்ட விசாரணையை டிசம்பா் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீன்... அதிமுக பொதுக்குழுவின் மெனு!

SCROLL FOR NEXT