விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே இளைஞா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திண்டிவனம் வட்டம், சாரம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரகுமாா் மகன் ஹரீஷ் (18). சந்திரகுமாா் தனது குடும்பத்துடன் சென்னையில் தங்கி வேலை பாா்த்து வருகிறாா்.
இந்நிலையில், பாட்டி ராகம்பாள் பராமரிப்பில் இருந்து வந்த ஹரீஷ், சனிக்கிழமை வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.