விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வழக்குரைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திண்டிவனம் வட்டம், ரோஷணை வெள்ளவாரி சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சு.சுவாமிசந்திரன்(38), சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்.
சுவாமிசந்திரனின் மனைவி காமாட்சி குடும்பப் பிரச்னையால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னா் பிரிந்து, திருக்கோவிலூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டாா்.
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சுவாமிசந்திரன் வெள்ளிக்கிழமை தனது வீட்டில் தூக்குபோட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இது குறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.