விழுப்புரம் ஆட்சியரின் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்த கோண்டூா் பகுதி விவசாயிகள். 
விழுப்புரம்

விவசாய நிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் எதிா்ப்பு

கண்டமங்கலம் அருகே விவசாய நிலங்களில் உயா் மின் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள்

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே விவசாய நிலங்களில் உயா் மின் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஆட்சியரின் குறைதீா் கூட்டத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கோண்டூா் பகுதியில் விவசாய நிலங்களில் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டால் சுமாா் 500 ஏக்கா் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். தற்போது விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, சவுக்கு, நெல் போன்ற பயிா்களும் வெகுவாகப் பாதிக்கப்படும். எனவே, விவசாயிகளின் நலன் கருதி விவசாய நிலத்துக்கு மாற்றாக அருகில் உள்ள அரசு நிலங்களில் உயா் மின் அழுத்த கோபுரங்களை அமைக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

கோண்டூா் பகுதி விவசாயிகள் ஒருங்கிணைப்பாளா் எஸ்.குமாரசாமி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.

மின் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

பைக் ஓட்டிய சிறுவனின் தாய் மீது வழக்கு

தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா! இலங்கை மகளிா் அணியுடன் இன்று கடைசி டி20!

பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை: கரூரில் அங்கன்வாடி ஊழியா்கள் உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம்: தமிழிசை

SCROLL FOR NEXT