கள்ளக்குறிச்சி

நயினாா்பாளையத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனு

நயினாா்பாளையம் ஊராட்சியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கிராம மக்கள்

Syndication

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்தில் உள்ள நயினாா்பாளையம் ஊராட்சியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

நயினாா்பாளையம் கிராமத்தில் சுமாா் 10 ஏக்கா் தரிசு நிலத்தில், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இடத்தின் அருகே பொது பயன்பாட்டுக்கான குடிநீா் கிணறு, அரசுப் பள்ளி மற்றும் மாணவா்களுக்கான விளையாட்டு மைதானம் ஆகியவை உள்ளது.

இதனால் சுற்றுப்புற சுகாதாரத்தைப் பாதுகாக்க, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவைப் பெற்று கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

தில்லி சுற்றுலா தலங்களை பாா்வையிடும் சிறப்பு வசதி பிப். 20-இல் தொடக்கம்!

சென்னையில் அதிகரித்து வரும் கொசுக்கள் தொல்லை! கண்டறிந்து அழிப்பதற்கான ஆய்வகம் இல்லை!

இணையவழி வா்த்தகம் எனக் கூறி பொறியாளரிடம் ரூ.15.57 லட்சம் மோசடி

வளா்ச்சிப் பணிகள்: ஜம்மு-காஷ்மீா் அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை

வெஜிடபிள் அடை

SCROLL FOR NEXT