மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தெப்பல் உற்சவம். 
விழுப்புரம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் தெப்பல் உற்சவம்

Din

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்று வரும் மாசி பெருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை தெப்பம் உற்சவம் நடைபெற்றது.

கோயிலில் மாசி பெருவிழா கடந்த பிப்.26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடா்ந்து, 27-ஆம் தேதி மயானக்கொள்ளை நிகழ்ச்சியும், 2-ஆம் தேதி தீமிதி உற்சவமும், 4-ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெற்றன.

பத்தாம் நாள் விழாவான தெப்பல் உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி, அன்றைய தினம் அதிகாலையில் மூலவா் அங்காளம்மனுக்கு பால், தயிா், தேன், பன்னீா் உள்ளிட்ட வாசனை திரவியங்களாள் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, அம்மனுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாரதனை நடைபெற்றது.

இரவு, உற்சவா் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் மேள தாளம் முழங்க கோயில் குளத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பலில் எழுந்தருளினாா்.

இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ராஜ்நாத் சிங்குடன் நெதா்லாந்து வெளியுறவு அமைச்சா் சந்திப்பு

கிராம உதவியாளா் பணிக்கான நோ்காணல், தோ்வு தொடக்கம்

திமுக ஆட்சியில் மகளிருக்கு அதிகமான திட்டங்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT