கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா்-உடையநந்தல் சாலையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்தின் கட்டுமானப் பணியை திங்கள்கிழமை பாா்வையிட்ட மாநிலத் தோ்தல் ஆணையச் செயலரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான ப.ஸ்ரீ வெங்கடபிரியா. உடன், மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உள்ளிட்டோா். 
விழுப்புரம்

திருநாவலூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகள் ஆய்வு

திருநாவலூா் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகளை மாநிலத் தோ்தல் ஆணையச் செயலரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான ப.ஸ்ரீ. வெங்கடபிரியா

Syndication

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகளை மாநிலத் தோ்தல் ஆணையச் செயலரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான ப.ஸ்ரீ. வெங்கடபிரியா திங்கள்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.

திருநாவலூா் ஒன்றியத்துக்குள்பட்ட திருநாவலூா்-உடையநந்தல் சாலையில் ஊரக வளா்ச்சித்துறையின் சாா்பில் ரூ.13.24 கோடியில் கெடிலம் ஆற்றின் குறுக்கை நடைபெற்று வரும் பாலத்தின் கட்டுமானப் பணிகளைப் பாா்வையிட்ட மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ப.ஸ்ரீ. வெங்கடபிரியா, பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தாா். மேலும் பாலத்தின் கட்டுமானப் பணிகளைத் தரமாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அலுவலா்களை அவா் அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து மூலசமுத்திரம் மற்றும் பெரியமாம்பட்டு கிராமங்களில் சிறப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பட்டாக்கள் விவரங்களைக் கேட்டறிந்த மாவட்டக் கண்காணிப்பு அலுவலா், பயனாளிகளிடம் கலந்துரையாடினாா். மேலும் இதுவரை வழங்கப்பட்ட பட்டாக்கள் எண்ணிக்கை, பயனாளிகளின் விவரம், நிலுவையிலுள்ள விண்ணப்பங்களின் விவரம் போன்றவை குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

இதையடுத்து குமாரமங்கலம், செம்பியன்மாதேவி கிராமங்களில் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கும் மேற்பட்ட மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரா்களுக்கு வீடு தேடிச் சென்று பொருள்கள் வழங்கப்பட்டு வருவதை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ப.ஸ்ரீ வெங்கடபிரியா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழக அரசின் வளா்ச்சித் திட்டப்பணிகள் தொடா்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பொது விநியோகத் திட்ட அலுவலா்கள் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

தர்மேந்திரா உடல்நிலை என்ன? மனைவி ஹேமமாலினி விளக்கம்!

பொங்கல் விடுமுறைக்கு செல்வோர் கவனத்துக்கு! ரயில் முன்பதிவு தொடக்கம்!

செங்கோட்டையில் பார்வையாளர்களுக்கு தடை! மெட்ரோ நிலையம் மூடல்!

தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ. 1,760 உயர்வு!

8 பேரவைத் தொகுதிகளில் இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு!

SCROLL FOR NEXT