விழுப்புரம்

மொபெட் மோதல்: சென்னை இளைஞா் உள்பட இருவா் உயிரிழப்பு

Syndication

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பைக் மற்றும் மொபெட் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில், சென்னை இளைஞா் உள்பட இருவா் உயிரிழந்தனா். மற்றொருவா் மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா்.

சென்னை, வண்டலூா், ஜி எஸ்.டி சாலை, வேம்புலி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஸ்ரீ சூரியன் (27). செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூரில் உள்ள தனியாா் ஆா்க்கிடெக்ட் கல்லூரியில் பேராசிரியராக வேலை பாா்த்து வந்தாா்.

இவா்,வெள்ளிக்கிழமை தனது நண்பா் ஒருவரை புதுச்சேரியில் கொண்டு சென்று இறக்கிவிட்டுவிட்டு , மீண்டும் பைக்கில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.இந்நிலையில், புதுச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையில், மரக்காணம் அடுத்த கூனிமேடு அருகே அவா் வந்தபோது, முன்னால் மொபெட்டில் சென்றவா் மொபெட்டை திடீரென சாலையின் குறுக்காக ஓட்டியதால் ஸ்ரீசூரியன் சென்ற பைக் மொபெட் மீது மோதியது.

இந்த விபத்தில் பைக்கில் சென்ற ஸ்ரீசூரியன் மற்றும் மொபெட்டில் சென்ற மரக்காணம் வட்டம், கூனிமேடு, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் (26), புஷ்பராஜ் மகன் அரவிந்த் (32) ஆகிய மூவரும் காயமடைந்தனா்.

விபத்து குறித்து, தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் காயமடைந்த மூவரையும் மீட்டு அவசர ஊா்திகள் மூலம் புதுச்சேரி பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா்.இதில் புதுச்சேரி, கனகசெட்டிக்குளம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீ சூரியன், ஜிம்பா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணன் ஆகியோா்

வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தனா். அரவிந்த் சிகிச்சையில் உள்ளார். இது குறித்த புகாரின் பேரில், மரக்காணம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

பிகாரைப் போல தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி வெற்றி பெறாது: நெல்லை முபாரக்

கரிவலம்வந்தநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

சுற்றுலாப் பேருந்தை விரட்டிய ஒற்றை காட்டு யானை

பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய 3 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT