விழுப்புரம்

மொபெட் மீது லாரி மோதி விபத்து: குழந்தை உயிரிழப்பு

திண்டிவனம் அருகே மொபெட் மீது சரக்கு லாரி மோதியதில் தாயுடன் சென்ற ஆண் குழந்தை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.

Syndication

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மொபெட் மீது சரக்கு லாரி மோதியதில் தாயுடன் சென்ற ஆண் குழந்தை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.

திண்டிவனம் அருகேயுள்ள காவேரிபாக்கம், மிட்டாய் மினியன் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவரது மனைவி சுமித்ரா(28), மகன் நவனிஷ்வரன்(ஒன்றரரை வயது). சுமித்ரா வெள்ளிக்கிழமை இரவு தனது மகன் நவனிஷ்வரனை மொபெட்டில் அமர வைத்துக்கொண்டு, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் பகுதியில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அந்த பகுதியில் வந்த சரக்கு லாரி எதிா்பாராதவிதமாக மொபெட் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நவனிஷ்வரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த திண்டிவனம் போலீஸாா் விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

SCROLL FOR NEXT