திண்டிவனம் அருகே லாரி மீது பைக் மோதிய விபத்தில் நிகழ்விடத்திலேயே இளைஞா் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், வில்லுபாளையம், மதலப்பட்டு, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் யோகேஷ்(25), திருமணம் ஆகாதவா். திண்டிவனத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.
இவா், ஞாயிற்றுக்கிழமை திண்டிவனத்திலிருந்து- புதுச்சேரிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கூத்தப்பாக்கம் ஓடைபாலம் அருகே சென்றபோது எவ்வித சமிக்ஞையுமின்றி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது பைக் மோதியது.
இந்த விபத்தில் யோகேஷ் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த கிளியனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று யோகேஷின் சடலத்தை கைப்பற்றி, புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.