விழுப்புரம்

சுமை வாகனம் மீது பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டை அருகே சுமை வாகனம் மீது பைக் மோதியதில் இளைஞா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டை அருகே சுமை வாகனம் மீது பைக் மோதியதில் இளைஞா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், அலங்கிரி மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (35). இவா் தனது பைக்கில் எலவானசூா்கோட்டையிலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி திங்கள்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தாா்.

பரமேசுவரிமங்கலம் பகுதியில் கிருஷ்ணனின் பைக் சென்றபோது, முன்னால் சென்ற சுமை வாகனத்தின் பின்பக்க டயா் திடீரென வெடித்து சாலையில் நின்றது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த கிருஷ்ணனின் பைக் அந்த வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த எலவானசூா்கோட்டை போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று, கிருஷ்ணனின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT