விழுப்புரம்

பூட் டிய வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரத்தில் பூட்டிய வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

Syndication

விழுப்புரத்தில் பூட்டிய வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் மேற்கு சண்முகபுரம், சோ்மன் ராஜ மாணிக்கம் தெருவைச் சோ்ந்தவா் சு.ராஜேந்திரன் (66). இவா், கடந்த அக் 17ஆம் தேதி தனது மாடி வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்து டன் தருமபுரியில் உள்ள மகள் வீட்டிற்குச் சென்றுவிட்டாா்.

தொடா்ந்து அக்.21- ஆம் தேதி வீட்டிற்கு திரும்பி வந்த பாா்த்த போது, வீடு பூட்டப்பட் டிருந்த நிலையில் அலமாரியில் கைப்பையில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் நெக்லஸ், 2 பவுன் வளையல். 2 பவுன் சங்கிலி, 2 பவுன் கை சங்கிலி உள்ளிட்ட 10 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்த புகாரின்பேரில் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்திய விழுப்புரம் மேற்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT