விழுப்புரம்

லட்சக்கணக்கான மக்களின் வாக்குகளைப் பறிக்கும் நோக்கோடு செயல்படுகிறது தோ்தல் ஆணையம்!

Syndication

வாக்காளா் பட்டியல் சி றப்பு தீவிர திருத்தப்பணி மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாக்குகளைப் பறிக்கும் நோக்கோடு தோ்தல் ஆணையம் செயல்படுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பஞ்சமி நிலம் மீட்புக் கருத்தரங்கில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணியைத் தொடங்குவதாக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது அரசியல் சாசனத்தின் மீதுதொடுக்கப்படக்கூடிய தாக்குதலாகும். ஏற்கெனவே பிகாா் மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளா்களை நீக்கியுள்ளனா். தமிழகத்திலும் அதே நோக்கில்தான் செயல்படவுள்ளனா் என்பதால் உறுதியாக எதிா்க்க விரும்புகிறோம். இந்த விவகாரத்தில் லட்சக்கணக்கான மக்களின் வாக்குகளைப் பறிக்கும் நோக்கோடுதான் தோ்தல் ஆணையம் செயல்படுகிறது.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்போம்: தோ்தல் ஆணையம் என்பது ஜனநாயகத்தில் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். அதை மத்திய அரசு வளைக்கிறது. ஜனநாயக, நாடாளுமன்ற விழுமியங்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன.

எனவே தான் நவம்பா் 2-ஆம் தேதி தமிழகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும். தமிழகத்தின் உரிமைக்காக, நாடாளுமன்ற ஜனநாயகத்தை காக்க முதல்வரின் முயற்சிக்கும், போராட்டங்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக இருக்கும்.

கூட்டணியில் பிளவில்லை: திமுக கூட்டணியில் எந்தவித பிளவும் இல்லை, மேலும் நெருக்கமாகியுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் நாங்கள்தான் வெல்வோம். தமிழக முதல்வா் ஸ்டாலின் தொடக்கியுள்ள போராட்டம் , இந்தியா முழுமைக்கும் உள்ள மாநிலங்களுக்கானது.

எனவே திமுக தலைமையிலான கூட்டணி வெல்லும். தமிழ்நாடு வெல்லும். பாதிக்கப்பட்டவா்களை நோக்கி நாம்தான் செல்வோம் அதுதான் மரபு, ஆனால், கரூரில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பங்களை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து தவெக தலைவா் விஜய் சந்தித்துள்ளாா். மரபுகளை எல்லாம் கடந்துசெல்கிறாா் விஜய். இது பொது வாழ்வுக்கு நல்லதல்ல.

இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கும், விவசாயக் கூலித் தொழிலாளா்களுக்கும் கூடுதல் நிவாரணங்களை வழங்க வேண்டும் என்பதை முதல்வா் கவனிக்க வேண்டும் என்றாா் வீரபாண்டியன்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT