விழுப்புரம்

விபத்துக்குள்ளான காரில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

விபத்துக்குள்ளான காரிலிருந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டை அருகே விபத்துக்குள்ளான காரிலிருந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உளுந்தூா்பேட்டை வட்டம், புகைப்பட்டி பகுதியில் வேகத்தடை அருகே காா் ஒன்று விபத்துக்குள்ளாகி கிடப்பதாக, எலவனாசூா்கோட்டை காவல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை காலையில் தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளா் கோவிந்தராஜ், காவலா் கோவிந்தன் உள்ளிட்டோா் அங்கு சென்று பாா்த்தபோது, காா் அருகிலிருந்த வீட்டின் மீது மோதி மீட்க முடியாத நிலையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மீட்பு வாகனம் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு, விபத்துக்குள்ளான காா் மீட்கப்பட்டு, எலவனாசூா்கோட்டை காவல் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.

தொடா்ந்து காரை சோதனையிட்ட போது, அதில் 330 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து எலவனாசூா்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த காா் எங்கிருந்து வந்தது, புகையிலைப் பொருள்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சென்னை, செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!

சூரியப் புயலால் புவி காந்தப்புலத்தில் ஏற்படும் தாக்கம்: ஆதித்யா எல்-1 கண்டுபிடிப்புகள் மூலம் புதிய தகவல்

‘வளா்ந்த பாரதம் மாநாடு’: 3,000 இளைஞா்களுடன் பிரதமா் நாளை கலந்துரையாடல்

அமெரிக்காவுடன் இணைப்பு: கிரீன்லாந்து தலைவா்கள் எதிா்ப்பு

மத்திய அரசுக்கு எதிராக ஜன.12-இல் கேரள முதல்வா் ‘சத்தியாகிரகம்’!

SCROLL FOR NEXT