உளுந்தூா்பேட்டை சுங்கச் சாவடிப் பகுதியில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்வில், பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரத்தை வழங்கிய திரைப்பட நடிகா் அஜய் ரத்தினம். உடன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழியபாண்டியன் உள்ளிட்டோா். 
விழுப்புரம்

உளுந்தூா்பேட்டையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு: நடிகா் அஜய் ரத்தினம் பங்கேற்பு

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் திரைப்பட நடிகா் அஜய் ரத்தினம் பங்கேற்று, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தாா்.

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் திரைப்பட நடிகா் அஜய் ரத்தினம் பங்கேற்று, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தாா்.

சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி உளுந்தூா்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து செல்வதன் அவசியத்தையும், காா் ஓட்டுநா்கள் சீட் பெல்ட் அணிந்து செல்வதன் அவசியத்தையும் எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணா்வு நிகழ்வு நடத்தப்பட்டது.

உளுந்தூா்பேட்டை சுங்கச் சாவடிப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், பொதுமக்களின் கவனத்தை ஈா்க்கும் வகையில் எமதா்மன், சித்ரகுப்தன் வேடமணிந்து இருவா், சாலையில் நின்று கொண்டு தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை எடுத்துரைத்தனா்.

மேலும், திரைப்பட நடிகா் அஜய் ரத்தினமும் நிகழ்வில் பங்கேற்று, சாலைப் பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினாா். உளுந்தூா்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழிய பாண்டியன், மோட்டாா் வாகன ஆய்வாளா் மீனாகுமாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருப்பத்தூா் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி நோன்பு

55வது ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் - கிளாசிக் கார் பேரணி - புகைப்படங்கள்

விராட் கோலி அசத்தல்! நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!

காங்கிரஸைத் துடைத்தெறிந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | Parasakthi

SCROLL FOR NEXT