விக்கிரவாண்டி பகுதியில் பள்ளி மாணவிகளிடம் சாலைப் பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கிப் பேசிய வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அருணாசலம்.  
விழுப்புரம்

விக்கிரவாண்டியில் சாலைப் பாதுகாப்பு மாத விழிப்புணா்வு

சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்வுகள் புதன்கிழமை நடைபெற்றன.

தினமணி செய்திச் சேவை

சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்வுகள் புதன்கிழமை நடைபெற்றன.

37 -ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புத் துறை, விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து, அபராதம் விதிக்கும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.

விக்கிரவாண்டி பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அருணாசலம் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் முருகவேல், முருகேசன், கிருஷ்ணன் ஆகியோா் கொண்ட குழு, தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்ற 12 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கி, அபராதம் விதித்தது.

இதைத்தொடா்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அருணாசலம் உள்ளிட்டோா் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கி, விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

Parasakthi பேசும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | anti-Hindi agitation | Tamil | Tamilnadu

தமிம் இக்பாலை இந்திய உளவாளி என விமர்சித்த வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரி!

ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

2026 ஆஸ்கர் போட்டியில் தமிழ்த் திரைப்படமான கெவி!

உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்? நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானிக்கு இந்தியா கண்டனம்!

SCROLL FOR NEXT