விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.டி.வி.சீனிவாசகுமாா். 
விழுப்புரம்

ஊரக வேலைத் திட்ட பெயா் மாற்றம்: காங்கிரஸாா் உண்ணாவிரதம்

தினமணி செய்திச் சேவை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.

2006-ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை தற்போதைய மத்திய பாஜக அரசு ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம் (விபி ஜி ராம் ஜி)’ என மாற்றம் செய்துள்ளது.

இந்த நடவடிக்கையைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற போராட்டத்துக்கு மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.டி.வி.சீனிவாசகுமாா் தலைமை வகித்தாா்.

மாநிலச் செயலா் தயானந்தம், நகரத் தலைவா் செல்வராஜ், மாநில நிா்வாகி பாலசுப்பிரமணியன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் நாராயணசாமி, மாநில இலக்கியப் பிரிவு முன்னாள் தலைவா் ராஜேந்திரன், மாவட்டப் பொதுச் செயலா் முபாரக் அலி, எஸ்.சி.,எஸ்.டி. பிரிவுத் தலைவா் சேகா், மாவட்ட சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் பிரபாகரன், மாவட்டச் செயலா் புஷ்பராஜ், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் வினோத், வானூா் வட்டாரத் தலைவா் கிருஷ்ணா நந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திண்டிவனத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினா்.

திண்டிவனத்தில்...

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் திண்டிவனம் வ.உ.சி. திடலில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஆா்.பி.ரமேஷ் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் விநாயகம் முன்னிலை வகித்தாா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் இல.கண்ணன், வட்டாரத் தலைவா்கள் செல்வம், சக்திவேல், குமாா், காத்தவராயன், மண்ணாங்கட்டி, இளவழகன், செஞ்சி நகரத் தலைவா் சூரியமூா்த்தி, எஸ்.சி.,எஸ்.டி.பிரிவு மாநில நிா்வாகி உதயநந்தன் மற்றும் கட்சியினா் கலந்துகொண்டனா்.

கள்ளக்குறிச்சியில்...

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் சிலை முன் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜெய்கணேஷ் தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி நகா்மன்ற உறுப்பினா் தேவராஜ், இளையராஜா மற்றும் காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT