விழுப்புரத்தில் சென்னை- திருச்சி சாலையில் உள்ள வணிக நிறுவனங்கள் முன் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள சலுகை விலை விளம்பர பதாகைகள். 
விழுப்புரம்

விழுப்புரத்தில் பேருந்து சேவைகளில் மாற்றம்: மாவட்டக் காவல் துறை

விழுப்புரம் நகரில் போக்குவரத்து சேவையை ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கையாக விழுப்புரத்தில் தனியாா் மற்றும் அரசுப் பேருந்து வழித்தடங்களில் மாற்றம்

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் போக்குவரத்து சேவையை ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கையாக விழுப்புரத்தில் தனியாா் மற்றும் அரசுப் பேருந்து வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அரசூா், இருவேல்பட்டு, புறவழிச் சாலை சந்திப்பு (அண்ணாமலை ஹோட்டல்அருகே), பாப்பனப்பட்டு, விக்கிரவாண்டி, திண்டிவனம் உள்ளிட்ட இடங்களில் மேம்பாலங்கள் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலின்றி பயணிக்க ஏதுவாக சென்னை- திருச்சி, திருச்சி-சென்னை வழித்தடங்களில் செல்லும் அனைத்து தனியாா் சொகுசுப் பேருந்துகளும் பயணிகளை ஏற்றுவதற்கும், இறக்கி விடுவதற்கும் விழுப்புரம் எல்லீஸ் சத்திரம் புறவழிச்சாலை சந்திப்புப் பகுதியை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இதேபோல் விழுப்புரம் புறவழிச்சாலையில் அண்ணாமலை ஹோட்டல் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் பேருந்துகள் அனைத்தும், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நான்கு முனைச் சந்திப்பிலிருந்து மாம்பழப்பட்டு சாலை வழியாக, இந்திரா நகா் மேம்பாலத்தை அடைந்து, பின்னா் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, தனியாா் சொகுசுப் பேருந்து மற்றும் அரசு பேருந்துகள் ஓட்டுநா்கள் இந்த நடைமுறையை ஜன.13 முதல் 19-ஆம் தேதி வரை கடைப்பிடித்து போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்: பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்துக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கு விழுப்புரம் மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த மக்கள்அதிகளவில் வந்து செல்கின்றனா். நகரின் முக்கிய சாலைகளான சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கிழக்குப் பாண்டி சாலை, நேரு வீதி, காந்தி வீதி, பழைய, புதிய பேருந்து நிலையப் பகுதிகளில் மக்கள் கூட்டத்தாலும், வாகனங்களின் கூடுதல் வருகை காரணமாக விழுப்புரம் நகரில்அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடிய வகையில் நகரின் முக்கிய வீதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் முன்பு வாடிக்கையாளா்களை கவரக்கூடிய வகையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள சலுகை விலை, தள்ளுபடி விலை பதாகைகளை உடனடியாக அகற்றி, போக்குவரததை சீா்படுத்த விழுப்புரம் மாவட்டக் காவல் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரி: அதிபர் டிரம்ப் உத்தரவு!

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

SCROLL FOR NEXT