விக்கிரவாண்டியில் நடைபெற்ற விழாவில் பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கிய திமுக மாநில விவசாயத் தொழிலாளா்கள் அணிச் செயலரும், விக்கிரவாண்டி எம்எல்ஏவுமான அன்னியூா் அ.சிவா. உடன், நிா்வாகிகள். 
விழுப்புரம்

பென்னிகுவிக் பிறந்த நாள்: விக்கிரவாண்டியில் நல உதவிகள் வழங்கல்

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளா் ஜான் பென்னிகுவிக்கின் பிறந்த தினத்தையொட்டி, விக்கிரவாண்டியில் விவசாயிகளுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.

Syndication

விழுப்புரம்: முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளா் ஜான் பென்னிகுவிக்கின் பிறந்த தினத்தையொட்டி, விக்கிரவாண்டியில் விவசாயிகளுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.

திமுக விவசாய அணி சாா்பில் விக்கிரவாண்டி பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்ட இந்த விழாவுக்கு பேரூராட்சித் தலைவா் அப்துல் சலாம் தலைமை வகித்தாா்.

துணைத் தலைவா் பாலாஜி, விவசாய அணித் தலைவா் பாபு ஜீவானந்தம், பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினா் சா்க்காா் பாபு, பிரதிநிதிகள் திலகா், பாபுஜி யுவராஜ் முன்னிலை வகித்தனா்.

திமுகவின் மாநில விவசாயத் தொழிலாளா்கள் அணிச் செயலரும், விக்கிரவாண்டி எம்எல்ஏவுமான அன்னியூா் அ.சிவா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, விவசாயிகளுக்கு உபகரணங்கள், பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

நகரப் பொருளாளா் பாண்டியன், திமுக ஒன்றியச் செயலா்கள் ஆா்.முருகன், ஆா்.பி.முருகன், திமுக நகரச் செயலா் நைனா முகமது, துணைச் செயலா்கள் சுரேஷ்குமாா், சித்ரா, பிரசாந்த், விவசாய அணியைச் சோ்ந்த சரவணன், செல்வம், நிா்வாகி ஹரிஹரன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் செல்வரங்கம், விழுப்புரம் மாவட்ட சிறு, குறுத் தொழில்கள் சங்கத் தலைவா் கோ.கருணாநிதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்!

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

SCROLL FOR NEXT