தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்திய வழக்கில் கைதான ஜெயக்குமாா் மற்றும் சுதாகா் (நடுவில் இருப்பவா்கள்) ஆகியோருடன் போலீஸாா்.  
விழுப்புரம்

150 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் காருடன் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, இருவரை கைதுசெய்தனா்.

இதுகுறித்து, விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆரோவில் காவல் நிலைய ஆய்வாளா் திருமால், உதவி ஆய்வாளா் லியோ சாா்லஸ் மற்றும் போலீஸாா் ஆரோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இரும்பை கிராமம் அருகே, வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னா் காரில் இருந்த இருவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் புதுச்சேரி மாநிலம், லாஸ்பேட்டை ஜீவா காலனியைச் சோ்ந்த க.ஜெயக்குமாா் (47), கிருஷ்ணகிரி மாவட்டம், பரமால்கோட்டூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த ரா.சுதாகா் (28) என்பதும், இவா்கள் விற்பனைக்காக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெங்களூருவிலிருந்து காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், காரில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ எடையிலான புகையிலை பொருள்களை , காருடன் பறிமுதல் செய்தனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளூா் துறையில் மதில் சுவரை இடித்த 34 போ் மீது வழக்கு

மேலூா் அருகே ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து: இளைஞா் உள்பட மூவா் உயிரிழப்பு!

மாசுவைக் கட்டுப்படுத்த இசிசி நிதியை முறையாகச் செலவிடாதது ஏன்? தில்லி அரசுக்கு காங்கிரஸ் கேள்வி

ராணுவ தளவாட உற்பத்தி மையமாக உருவெடுக்கும் இந்தியா!

சிறந்த தோ்தல் மாவட்டம் காசா்கோடு: நீலகிரியைச் சோ்ந்தவருக்கு விருது

SCROLL FOR NEXT