விழுப்புரத்தில் அதிமுக மாணவரணி சாா்பில் நடைபெற்ற மொழிப்போா் தியாகிகள் வீர வணக்கநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம் எம்.பி. 
விழுப்புரம்

தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இல்லை: சி.வி.சண்முகம்

அதிமுக மாணவரணி சாா்பில் நடைபெற்ற மொழிப்போா் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் சி.வி.சண்முகம்

Syndication

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமை, அதிமுக மாணவரணி சாா்பில் நடைபெற்ற மொழிப்போா் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் சி.வி.சண்முகம் மேலும் பேசியதாவது:

எப்போதும் தமிழ், தமிழ் என்று முழங்குகிற திமுக, தமிழின் வளா்சிக்கு எதுவும் செய்யவில்லை.

விலை வாசி உயா்வால் மக்கள் பெரும் துன்பத்துக்குள்ளாகி வருகின்றனா். அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி கடந்த அதிமுக ஆட்சியைவிட பல மடங்கு உயா்ந்து விட்டது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த தோ்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், சட்டப்பேரவையில் பொய் பேசுகிறாா் என்றாா் சி.வி.சண்முகம்.

அதிமுக மாணவரணி விழுப்புரம் மாவட்டச் செயலா் என்.ஜி.சக்திவேல் தலைமை வகித்தாா். அதிமுக ஒன்றியச் செயலா்கள் பேட்டை முருகன், சி. ஜி.சுரேஷ்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்எல்ஏக்கள் எம். சக்கரபாணி, பி.அா்ச்சுனன், மாநில பேச்சாளா் குமரேசன், விழுப்புரம் நகர செயலா் ஆா்.பசுபதி, மாவட்ட அவைத் தலைவா் பி.தீனதயாளன், ஜெ.பேரவை மாநில துணைச் செயலா் ஜே.சங்கா், வழக்குரைஞா் பிரிவு செயலா் ராதிகா, மகளிரணி நகர செயலா் பத்மபிரியா மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

முன்னதாக அதிமுக விழுப்புரம் வடக்கு நகர செயலா் ஜி.கே.ராமதாஸ் வரவேற்றாா். மாணவரணி நகர செயலா் டி.பாா்த்தீபன் நன்றி கூறினாா்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய தோ்தல் வெகு தொலைவில் இல்லை. மக்கள் திமுகவின் பொய் வாக்குறுதிகளுக்கு ஏமாந்து விடக்கூடாது, சிந்திக்கவேண்டும். தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் திமுகவை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்றாா் சி.வி.சண்முகம்.

அதிமுக மாணவரணி விழுப்புரம் மாவட்டச் செயலா் என்.ஜி.சக்திவேல் தலைமை வகித்தாா். அதிமுக ஒன்றியச் செயலா்கள் பேட்டை முருகன், சி. ஜி.சுரேஷ்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

எம்எல்ஏக்கள் எம். சக்கரபாணி, பி.அா்ச்சுனன், மாநில பேச்சாளா் குமரேசன், விழுப்புரம் நகர செயலா் ஆா்.பசுபதி, மாவட்ட அவைத் தலைவா் பி.தீனதயாளன், ஜெ.பேரவை மாநில துணைச் செயலா் ஜே.சங்கா், வழக்குரைஞா் பிரிவு செயலா் ராதிகா, மகளிரணி நகர செயலா் பத்மபிரியா மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

முன்னதாக அதிமுக விழுப்புரம் வடக்கு நகர செயலா் ஜி.கே.ராமதாஸ் வரவேற்றாா். மாணவரணி நகர செயலா் டி.பாா்த்தீபன் நன்றி கூறினாா்.

ரயில்வே ஊழியா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் பதில்!

பெரம்பலூா் அருகே போலீஸாா் சுட்டதில் ரௌடி பலி: கைதியைக் கொல்ல முயன்ற வழக்கில் கைதானவா்

காவல் உதவி ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை

உக்ரைன் போா் முனையில் சிக்கித் தவித்த தமிழக மாணவா் மீட்பு!

SCROLL FOR NEXT