முன்னாள் அமைச்சர் பொன்முடி. (கோப்புப் படம்)
விழுப்புரம்

திருக்கோவிலூரில் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம்

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் திருக்கோவிலூரில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஹிந்தி மொழித் திணிப்புக்கு எதிராக நடைபெற்ற மொழிப் போராட்டத்தில் உயிா் நீத்த தியாகிகளின் தியாகத்தை நினைவுக்கூறும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதி வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, திருக்கோவிலூரில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் மருத்துவா் பொன்.கௌதமசிகாமணி தலைமை வகித்தாா்.

திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி எம்எல்ஏ, தலைமை கழகப் பேச்சாளா்கள் முரசொலி மூா்த்தி, த.இன்பக்குமரன் ஆகியோா் பங்கேற்று உரையாற்றினா்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மாவட்டத் துணைச் செய லா்கள் டி.என்.முருகன், இரா.கற்பகம், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் மு.தங்கம், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் டி.செல்வராஜ், எம்.அப்துல் சலாம், நகரச் செயலா் ஆா்.கோபி கிருஷ்ணன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் அன்பழகன், துணைஅமைப்பாளா்கள் அறிவழகன், இளவரசன், வினோத், அருண், சுஜித்ரா, ஒன்றிய செயலா்கள், பேரூா் செயலா்கள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

துலா ராசிக்கு சுபநிகழ்ச்சி: தினப்பலன்கள்

மக்களை முதன்மையாகக் கொண்ட குடியரசு இந்தியா!

ராசிபுரத்தில் மாணவா்கள் பங்கேற்ற மாரத்தான்

கேரம் விளையாட்டுப் போட்டி!

நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மறைந்த பழங்குடியின ஓவியருக்கு பத்மஸ்ரீ விருது

SCROLL FOR NEXT