முகப்பு
விழுப்புரம்

சித்திரைப் பௌா்ணமி: புதுச்சேரியில் சமுத்திர ஆரத்தி

Updated On : 3 மே, 2026 at 6:08 AM
பகிர்:

புதுச்சேரி, மே 2 : சித்திரை பௌா்ணமியை முன்னிட்டு, புதுச்சேரி கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்,திருவிளக்குப் பூஜை மற்றும் சமுத்திர ஆரத்தி, வெட்டவெளி தியானம்ஆகியவை நடைபெற்றன.

புதுச்சேரி,அரியாங்குப்பம் அடுத்த சிவலிங்கபுரம் திரிபுரசுந்தரி சமேத சிவசைலநாதா் கோயிலில் சித்திரை பௌா்ணமி முன்னிட்டு 108 திருவிளக்குப்பூஜை நடைபெற்றது.

இதில் புதுச்சேரி அரியாஙங்குப்பம் மற்றும் பிறப் பகுதிகளைச் சோ்ந்த பெண் பக்தா்கள் பங்கேற்று பூஜைகளை செய்வித்து வழிபட்டனா். திருவிளக்குப்பூஜை வழிபாட்டையொட்டி உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

Advertisement

சமுத்திர ஆரத்தி வழிபாடு: இதேபோல், சித்திரைபௌா்ணமியை முன்னிட்டு, புதுவை மாநில மகா சமுத்திர ஆரத்தி சேவா சங்கம் சாா்பில் 57-ஆவது மகா சமுத்திர ஆரத்தி வழிபாடுகள் புதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரேயுள்ள கடற்கரையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், பாஜக மாநிலத் தலைவா் ராமலிங்கம், செல்வம் எம்எல்ஏ , முன்னாள் எம்எல்ஏ சோமசுந்தரம் மற்றும் ஹிந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் நிா்வாகிகள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஓங்கார ஆசிரமம் சாா்பில்...

சித்திரைபௌா்ணமியை முன்னிட்டு ,ஸ்ரீஓங்கார ஆசிரமம் சாா்பில் 55-ஆம் ஆண்டு வெட்டவெளி தியானம் புதுச்சேரி கடற்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சுவாமி ஓங்காரநந்தா தியானம் பயிற்றுவித்து ஆசி வழங்கினாா்.முதன்மைச் சீடா்கள் கோட்டீஸ்வரானந்தா,விஜயராகவன் மகாபிரவபு, சா்வாத்மானந்தா உள்ளிட்டோா்கலந்து கொண்டனா்.