சிதம்பரத்தில் ஜெ. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
சிதம்பரம் கீழவீதி அதிமுக அலுவலகத்தில் ஏழை பெண்கள் இருவருக்கு இலவச தையல் இயந்திரம், சலவைப் பெட்டி ஆகியவற்றை நகரமன்றத் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் தோப்பு கே.
சிதம்பரம் நகர அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா 65-வது பிறந்தநாள் விழா 33 வார்டுகளில் கொடியேற்றி இனிப்பு வழங்கியும், ஏழைகளுக்கு இலவச அரிசி, அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது.
சிதம்பரம் கீழவீதி அதிமுக அலுவலகத்தில் ஏழை பெண்கள் இருவருக்கு இலவச தையல் இயந்திரம், சலவைப் பெட்டி ஆகியவற்றை நகரமன்றத் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் தலைமை வகித்தார். மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலர் சொ.ஜவகர், நகர அவைத் தலைவர் எம்.யேசுராஜ், நகர துணைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், நகர பேரவைச் செயலாளர் பன்னீர்செல்வம், தலைமைக்கழக பேச்சாளர் தில்லை செல்வம், நிர்வாகிகள் எம்.சண்முகசுந்தரம், குமார், நகரமன்ற உறுப்பினர்கள் நடனசபாபதி தீட்சிதர், ஜெயவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் ஸ்ரீநடராஜர் கோயில், ஸ்ரீதில்லைக்காளியம்மன் கோயில் சிறப்பு வழிபாடும், சிறப்பு அர்ச்சனையும் செய்யப்பட்டது.