ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை
கடலூரில் உலக ரெட்கிராஸ் தினத்தை முன்னிட்டு, ஜே.சி.ஐ. கடலூர் விடியல் கிளை மற்றும் ரெட்கிராஸ் சங்கம் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.
கடலூரில் உலக ரெட்கிராஸ் தினத்தை முன்னிட்டு, ஜே.சி.ஐ. கடலூர் விடியல் கிளை மற்றும் ரெட்கிராஸ் சங்கம் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.
ஜே.சி.ஐ. அமைப்புத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். தலைவர் (தேர்வு) சித்ரகலா, செயலர் (தேர்வு) புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரெட்கிராஸ் மாவட்டச் செயலர் பாலசுப்ரமணியம், காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்.ஐ. பரமேஸ்வரன், தயாநிதி, பரத்வேல், உறுப்பினர்கள் ராம்குமார், ஆசிகா களப்பணியாளர்கள் சங்கீதா, லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement