முகப்பு
கடலூர்

பா.ம.க.வினர் வீண்பழி போடுவதாக விடுதலைச் சிறுத்தைகள் புகார்

: மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து நடந்து வரும் வன்முறையில் பாமகவினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வீண்பழி போடுவதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்

Updated On : 13 மே 2013, 12:44 am IST
பகிர்:

: மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து நடந்து வரும் வன்முறையில் பாமகவினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வீண்பழி போடுவதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடலூரில் ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கூட்டம், மாவட்டச் செயலர் தாமரைசெல்வன் தலைமையில் கடலூரில் அண்மையில் நடந்தது.  மாவட்டப் பொருளர் மன்னர்நந்தன், துணைச்செயலர் ஜெயகுமார், ஸ்ரீதர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியச் செயலர் சக்திவேல் வரவேற்றார். மாவட்ட செய்தித் தொடர்பாளர் ஆதவன், நகரச் செயலர் பாவாணன் உள்ளிட்டோர்

பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து நடந்து வரும் வன்முறையில் பாமகவினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது பழிபோடும் செயலைக் கண்டிப்பது. மே 26-ம் தேதி கடலூர் மாவட்டம் வரும் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.