சிதம்பரம் அண்ணாமலைநகர் என்சிசி அலுவலகத்தில் என்சிசி தலைமை இயக்குநர் ஆய்வு
சிதம்பரம் அண்ணாமலைநகர் 6வது பட்டாலியன் என்சிசி அலுவலகத்தில் தமிழ்நாடு என்சிசி தலைமை இயக்குநர் கே.எஸ்.ஐயப்பன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
சிதம்பரம் அண்ணாமலைநகர் 6வது பட்டாலியன் என்சிசி அலுவலகத்தில் தமிழ்நாடு என்சிசி தலைமை இயக்குநர் கே.எஸ்.ஐயப்பன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்விற்காக வருகை தந்த தலைமை இயக்குநர் கே.எஸ்.ஐயப்பன் என்சிசி வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் கே.எஸ்.ஐயப்பன் என்சிசி அலுவலகத்தின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் குரூப் கமாண்டர் கர்னல் மகேந்திரகுமார் ஜோஷி, கமாண்டிங் அதிகாரி கர்னல் ஜெய்தீப்பூரி, லெப்டினன்ட் கர்னல் சீனுவாசன், சுபேதார் மேஜர் மதிவாணன் மற்றும் என்சிசி அதிகாரிகள் பங்கேற்றனர். என்சிசி 6வது பட்டாலியனில் 3 ஆயிரம் மாணவர்களுக்கு 4வது பட்டாலியனில் 1500 மாணவர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.