முகப்பு
கடலூர்

சிதம்பரத்தில் ஜெ. பேரவை மக்கள் முகாம்: ஏ.அருண்மொழிதேவன் எம்பி தொடங்கி வைத்தார்

கூட்டத்திற்கு மாவட்ட பேரவைச் செயலாளர் எம்.உமாமகேஸ்வரன் தலைமை வகித்தார். நகர பேரவை இணைச் செயலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி, பேரவைத் தலைவர் பி.லோகநாதன் ஆகியோர் முன்னிலை

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:59 AM
பகிர்:

கடலூர் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி சாதனைகளை விளக்கும் ஜெ. பேரவை மக்கள் மக்கள் முகாம் தெருமுனை பிரசாரக்கூட்டம் சிதம்பரம் காந்திசிலை அருகே சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட பேரவைச் செயலாளர் எம்.உமாமகேஸ்வரன் தலைமை வகித்தார். நகர பேரவை இணைச் செயலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி, பேரவைத் தலைவர் பி.லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் வரவேற்றார். கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் எம்பி முகாமை தொடங்கி வைத்துப் பேசினார். தலைமைக்கழக பேச்சாளர் நல்லாற்று நடராஜன் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் செல்விராமஜெயம் எம்எல்ஏ, நாக.முருகுமாறன் எம்எல்ஏ, மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், தொகுதி செயலாளர் முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள், தலைமைக்கழக பேச்சாளர் தில்லை கோபி, கூட்டுறவு நகர வங்கி தலைவர் சொ.ஜவகர், கீரப்பாளையம் ஒன்றியக்குழுத் தலைவர் வி.ஆர்.ஜெயபாலன், நகர துணைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், பால்வளத்தலைவர் சி.கே.சுரேஷ்பாபு, பொதுக்குழு உறுப்பினர் தில்லை சேகர், நகரமன்ற துணைத் தலைவர் ரா.செந்தில்குமார், நகர அவைத் தலைவர் எம்.யேசுராஜ், குமார், மணிவேல், கருப்பு ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர பேரவைச் செயலாளர் கே.பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.