முகப்பு
கடலூர்

குருபெயர்ச்சி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

குரு பெயர்ச்சியை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கடலூர்

குருபெயர்ச்சி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

குரு பெயர்ச்சியை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

குரு பெயர்ச்சியை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
 திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில், வில்வநாதீஸ்வரர் கோயில், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் குருபெயர்ச்சி சிறப்புப் பூஜை நடைபெற்றது. இந்த பூஜைகளில் புதுமண தம்பதிகள், பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள், பொதுமக்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
 அதேபோல் கடலூர் வண்டிப்பாளையம் சுப்ரமணியர் கோயில், புருகீஸ்பேட்டை முருகன் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
 சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஓமாம்புலியூர் ஸ்ரீப்ரணவ வியாக்ர புரீஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற்றது.
 சோழர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில், பார்வதி தேவிக்கு பஞ்சாஷர உபதேசம் செய்த ஸ்தலமாகும். இங்கு குரு பகவான் சிவனுக்கும் அம்பாளுக்கும் இடையே வீற்றுள்ளார். இதுபோல் குருபகவான் எங்கும் காட்சியளிப்பதில்லை. மூலஸ்தானத்தில் குரு பகவான் வீற்றுள்ளார்.
 குருபெயர்ச்சியை முன்னிட்டு இக்கோயிலில் உள்ள குரு பகவானுக்கு, கொள்ளிடம் ஆற்றிலிருந்து நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் பால்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பெற்று சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
 திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
 நெய்வேலி: பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் வீற்றுள்ள குருதட்சிணாமூர்த்திக்கு செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடைபெற்றது.
 இதேபோல், பண்ருட்டி சோமேஸ்வரர் கோயில், புதுப்பேட்டை, செம்மேடு காசி விஸ்வநாதர் கோயில், திருத்துறையூர் சிஷ்டகுருநாதர் கோயில்களில் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
 ஆடி அமாவாசை மற்றும் ஆடிப் பெருக்கை முன்னிட்டு திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் உள்ள துர்கை அம்மனுக்கு கனகாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை துர்கா மகளிர் மன்றத்தினர் செய்தனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு பண்ருட்டி, திருவதிகை ஸ்ரீ சரநாராயணப்பெருமாள் (மூலவர்) பூவாலங்கி சேவையிலும், உற்சவர் திருக்கண்ணாடி அறையிலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →