முகப்பு
கடலூர்

உப்பனாற்றில் காணாமல் போன இளைஞர்களை தேடும் பணி தீவிரம்

கடலூர் அருகே உப்பனாற்றில் காணாமல் போன இரு இளைஞர்களை தேடும் பணி இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

கடலூர் அருகே உப்பனாற்றில் காணாமல் போன இரு இளைஞர்களை தேடும் பணி இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நடைபெற்றது.
 கடலூர் அருகே உள்ள நடுத்திட்டு அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர்கள் மாயவன் மகன் தருமன் (21), காசிதேவன் மகன் மகாபிரபு (18). இருவரும் செவ்வாய்க்கிழமை மாலை அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்களுடன் உப்பனாறுக்குச் சென்றுள்ளனர்.
 அப்போது, நண்பர்கள் ஆற்றைக் கடந்தபோது தருமன், மகாபிரபு இருவரும் மட்டும் மறுகரைக்கு வரவில்லையாம்.
 இதையடுத்து, காணாமல் போன இருவரையும் தேடும் பணியில் அவர்களது உறவினர்கள், கடலூர் சிப்காட் தீயணைப்பு மீட்புப் படையினர், முதுநகர் காவல் துறையினர் ஆகியோர் ஈடுபட்டனர். இந்தப் பணி இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நடைபெற்றது. எனினும், காணாமல் போன இருவரையும் மீட்கும் பணியில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →