கடலூர்

ராஜகோபால சுவாமி கோயில் குளம் தூர்வாரும் பணி

தினமணி

கடலூர் புதுப்பாளையத்தில் அமைந்துள்ள பழைமையான ஸ்ரீராஜகோபாலசுவாமி கோயில் குளம் தூர்வாரும் பணி சனிக்கிழமை தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 கடலூர் புதுப்பாளையத்தில் பழைமையான ஸ்ரீராஜகோபாலசுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழுள்ள இந்தக் கோயிலில் தமிழக அரசின் அன்னதானத் திட்டத்தின் கீழ் தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
 இந்தக் கோயிலின் முன்புறத்தில் அமைந்துள்ள தெப்பக்குளம் சிதலமடைந்த நிலையில் தூர்வாரப்படாமல் கிடந்தது. எனவே, குளத்தைத் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
 இதைத் தொடர்ந்து கோயில் குளத்தைத் தூர்வாரும் பணி சனிக்கிழமை தொடங்கியது. பணியை கோயில் செயல் அலுவலர் ப.முத்துலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 இந்தக் கோயிலின் முன்புறம் ரூ. 53 லட்சத்தில் உபயதாரரால் நான்கு நிலை ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு குடமுழுக்குக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. யுனஸ்கோ அமைப்பின் அனுமதி பெற வேண்டியிருப்பதால் காலதாமதமாகி வருகிறது. குடமுழுக்கின் போது தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
 எனவே, பல ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம் தற்போது தூர்வாரப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் ஆர்வமுள்ள பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம் என கோயில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT