கடலூர்

தில்லைக் காளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

தினமணி

பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீ தில்லைக்காளியம்மன் கோயிலில் புதன்கிழமை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது. ரூ. 7 லட்சத்து 14 ஆயிரத்து 723-ஐ காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.
 இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் சி.ஜோதி, நிர்வாக அதிகாரி க.முருகன், ஆய்வாளர் ராமநாதன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. கோயில் அலுவலர்கள் வாசு, வெங்கடேசன், ராஜ்குமார், முத்துக்குமரன், வங்கி ஊழியர்கள், திருக்கோயில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 723 ரூபாய் கிடைத்தது.
 மேலும், உண்டியலில் பக்தர்கள் செலுத்திய தங்கம் 40.500 மில்லி கிராம், வெள்ளி 204 கிராம், வெளிநாட்டுப் பணம் சிங்கப்பூர் டாலர் - 2, கத்தார் - 1 ரியால், மலேசியா ரிங்கட் - 332 ஆகியவை இருந்தன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துளிகள்...

மஞ்சள், பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்களின் விலை உயா்வு

கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும்: அன்புமணி

கரசேவகா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்கலாமா? உ.பி.யில் அமித் ஷா பிரசாரம்

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT