கடலூர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தினமணி

காடாம்புலியூரில் தனி நபர் ஆக்கிரமித்துள்ள காதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்காத வருவாய்த் துறையினரைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 ஆர்ப்பாட்டத்துக்கு வட்டக் குழு எம்.ஆறுமுகம் தலைமை வகித்தார். கிளைச் செயலர்கள் முத்தரசன்குப்பம் கே.மகாலிங்கம், சா.மாம்பட்டு ஜி.அல்போன்ஸ், அழகப்பசமுத்திரம் சி.மரியஜோசப், ஆர்.கணேஷ் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைச் செயலர் வி.குளோப், மாவட்ட நிர்வாகக் குழு பி.துரை ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
 மாவட்டக் குழு ஆர்.மதியழகன், வட்டக் குழு ஜி.முருகன், கே.முத்துக்குமரன், ஜி.ரமேஷ், ஒன்றியக் குழு ஜெ.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 இதனைத் தொடர்ந்து, வட்டாட்சியர் விஜய் ஆனந்தை சந்தித்து மனு அளித்தனர். அதில், மேற்கண்ட இடத்தில் உள்ள தனி நபர் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்றால், ஏப்ரல் 15-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT