கடலூர்

மதுக் கடைக்கு எதிராகப் போராட்டம்

DIN

நெய்வேலி அருகே தொப்புளிக்குப்பத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர்.
 கம்மாபுரம் ஒன்றியம், அம்மேரி ஊராட்சிக்கு உள்பட்டது தொப்புலிக்குப்பம் கிராமம். இந்தக் கிராமத்தில் குடியிருப்புப் பகுதியில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. சுற்றுவட்ட பகுதிகளில் இருந்த மதுபானக் கடைகள் மூடப்பட்டதை அடுத்து, இந்தக் கடைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதாம்.
 எனவே, மதுக் கடையை அகற்றக்கோரி வெள்ளிக்கிழமை 100-க்கும் மேற்பட்டோர் அந்தக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கலால் வட்டாட்சியர் ரவிச்சந்திரன், தெர்மல் ஆய்வாளர் சீனுவாசன், ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 அப்போது, 3 தினங்களுக்குள் கடையை அகற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT