கடலூர்

மதுக் கடையை மூடக் கோரி வி.சி.க. போராட்டம்

DIN

திட்டக்குடியில் உள்ள மதுக் கடையை மூடக்கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 திட்டக்குடியில் வெள்ளாற்றங்கரையில் மயானம் அருகே புதிய டாஸ்மாக் கடை கடந்த 6 நாள்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்தப் பகுதியில் கூலித் தொழிலாளர்கள் அதிகளவில் வசித்து வருவதால் கடையை நிரந்தரமாக மூட வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலர் கெளதமன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் ஜான்செங்குட்டுவன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜேம்ஸ், இளம் சிறுத்தைகள் அமைப்பின் மாவட்டச் செயலர் குமார், பாஜக நகரச் செயலர் கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 தகவலின் பேரில் துணை வட்டாட்சியர் எழில்வளவன், வருவாய் முதன்மை உதவியாளர் ஜெயச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர்
ரஞ்சித்குமார் ஆகியோர் வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நத்தினர். கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து கட்சியினர் கலைந்து சென்றனர்.
 தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வட்டாட்சியர்  அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

SCROLL FOR NEXT