கடலூர்

நேரு இளையோர் மைய ரத்த தான முகாம்

தினமணி

கடலூர் மாவட்ட நேரு இளையோர் மையம், மாலுமியார்பேட்டை இயற்கை இளையோர் மன்றம் சார்பில், நேரு இளையோர் மன்றம் உதயமான தின விழா கடலூரில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
 இதனை முன்னிட்டு, தன்னார்வலர்கள் ரத்தம் தானம் வழங்கும் நிகழ்ச்சி, கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனையில், மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் எம்.ஹெலன்ராணி தலைமையில் நடைபெற்றது.
 அரசுத் தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் என்.ஹபீசா, ரத்த வங்கி அலுவலர் ஜி.சாய்லீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் எஸ்.மாதவி ரத்த தான முகாமை தொடக்கி வைத்தார். இதில், தன்னார்வலர்கள் 50 பேர் பங்கேற்று ரத்த தானம் வழங்கினர்.
 எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அலகு மாவட்ட மேலாளர் கே.கதிரவன் முகாமை ஒருங்கிணைத்தார். முன்னதாக நேரு இளையோர் மைய கணக்காளர் டி.சக்கரவர்த்தி வரவேற்றார். இயற்கை இளையோர் மன்றத் தலைவர் ரா.சண்முகம் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT