சாலையைச் சீரமைக்க உறுதியளித்ததால் போராட்டம் ஒத்திவைப்பு
திட்டக்குடி அருகே உள்ள சிறுமுளையில் சாலைகள் சீர் செய்யப்படாததைக் கண்டித்து, அனைத்துக் கட்சிகள், கிராம மக்கள் சார்பில், திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்
கடலூர்சாலையைச் சீரமைக்க உறுதியளித்ததால் போராட்டம் ஒத்திவைப்பு
திட்டக்குடி அருகே உள்ள சிறுமுளையில் சாலைகள் சீர் செய்யப்படாததைக் கண்டித்து, அனைத்துக் கட்சிகள், கிராம மக்கள் சார்பில், திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்
திட்டக்குடி அருகே உள்ள சிறுமுளையில் சாலைகள் சீர் செய்யப்படாததைக் கண்டித்து, அனைத்துக் கட்சிகள், கிராம மக்கள் சார்பில், திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
நெடுஞ்சாலை துறை உதவிக் கோட்டப் பொறியாளர் திருகுணா, உதவிப் பொறியாளர் ராஜா, காவல் நிலைய ஆய்வாளர் பாண்டியன், பாமக நிர்வாகிகள் தனபால், அம்பிகாபதி, மருதாசலம் திமுக சார்பில் பழனிவேல், காங்கிரஸ் சார்பில் தாமோதரன், விசிக சார்பில் வீரமணி, கிராம மக்கள் சார்பில் வைரமுத்து, வீராசாமி, ஜோதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, கிராம சாலைகளின் இருபுறங்களிலும் ஒரு மீட்டர் அகலத்துக்கு கிராவல் நிரவி சாலைகளைச் சீர்செய்யவும், போக்குவரத்தை மேன்மைபடுத்தவும், சிறுமுளை- நிதிநத்தம் சாலையை அகலபாதையாக்கவும் உறுதியளிக்கப்பட்டது. இதனை ஏற்று கிராம மக்கள் உண்ணாவிரதத்தை ஒத்திவைப்பதாகத் தெரிவித்தனர்.