திமுக - காங்கிரஸ் பேச்சுவாா்த்தை விரைவில் சுமுகமாக முடியும்: அமைச்சா் எஸ். ரகுபதி
திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை விரைவில் சுமுகமாக முடியும் என்றாா் அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டைதிமுக - காங்கிரஸ் பேச்சுவாா்த்தை விரைவில் சுமுகமாக முடியும்: அமைச்சா் எஸ். ரகுபதி
திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை விரைவில் சுமுகமாக முடியும் என்றாா் அமைச்சா் எஸ். ரகுபதி.
திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை விரைவில் சுமுகமாக முடியும் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: அதிமுக - பாஜக கூட்டணி என்பது இடியாப்பச் சிக்கல். அதனுடன் திமுக கூட்டணியை ஒப்பிட்டுப் பேச முடியாது. திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடா்பான பேச்சுவாா்த்தை விரைவில் சுமுகமாக முடியும்.
விளிம்புநிலை மக்களுக்கு ரூ. 2 ஆயிரம் இன்று அவரவா் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது மக்களின் பணம். இதைக் கொடுப்பதில் தவறில்லை. தமிழக மக்களிடம் பணம் கொடுத்தெல்லாம் வாக்குகளைப் பெற முடியாது. சாதனைகளைச் செய்து, அதனைச் சொல்லித்தான் வாக்கு சேகரிக்க முடியும்.
மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என திமுக பகல் கனவு காண்பதாக பிரதமா் மோடி தெரிவித்திருக்கிறாா். திமுகவின் கனவு உண்மையான கனவு.
தோ்தல் பரப்புரையை முதலில் தொடங்கிய கட்சி திமுக. வீடுவீடாக மகளிா் அணியினா் வாக்குசேகரிக்கும் பணிகளைத் தொடங்கிவிட்டாா்கள். திமுகவை நம்பி வருவோரை தலைமை அரவணைக்கிறது.
தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு பற்றி கேள்வி எழுப்புவோா், குஜராஜ், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்குச் சென்று பாா்த்து வந்து சொல்லலாம்.
நீதிமன்றத்தின் தீா்ப்பு குறித்து யாரும் கருத்துகூற முடியாது. வாய்ப்புள்ள சந்தா்ப்பங்களில் உச்ச நீதிமன்றம் வரை சென்று நீதியைக் கோரும் மேல்முறையீடு வாய்ப்பு அனைவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தோ்தலில் சவால் இருப்பதாகத் தெரியவில்லை. எது வந்தாலும் சமாளிக்கும் திறன் படைத்த இயக்கம்தான் திமுக என்றாா் ரகுபதி.