டெங்கு தடுப்பு நடவடிக்கை: ஆட்சியர் ஆய்வு
டெங்கு தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடலூர் அரசு மகளிர் பள்ளியில், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
டெங்கு தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடலூர் அரசு மகளிர் பள்ளியில், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் திருப்பாதிப்புலியூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக ஏடிஸ் கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறியும் வகையில், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, பள்ளிக் கட்டடங்களின் மாடிப் பகுதிகளை தினமும் சுத்தம் செய்ய வேண்டும், சமையல் கூடத்தில் உள்ள குடிநீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களைச் சுத்தமாக வைத்திருப்பதோடு, பள்ளியின் உள்புறங்களிலுள்ள தேவையற்ற பொருள்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமெனவும் ஆசிரியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள், ஏடிஸ் கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறியும் வகையில் உபயோகமற்ற பொருள்களான டயர், தேநீர் குவளைகள், குடிநீர் பாட்டில்கள், தெர்மாகோல் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும். தங்களுக்கு காய்ச்சலுக்கான அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு பொது மருத்துவமனைக்கு சென்று உரிய பரிசோதனை செய்து சிகிச்சை பெறவேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.
ஆய்வின் போது நகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான், நகர்நல அலுவலர் தி.எழில்மதனா ஆகியோர் உடனிருந்தனர்.