முகப்பு
கடலூர்

போலியோ தடுப்புக்கான நிதி திரட்டல்

பண்ருட்டி ரோட்டரி சங்கம் சார்பில், ரோட்டரி பவுண்டேஷனுக்கு போலியோ தடுப்புக்கான நிதியைத் திரட்டுவதற்கான படிவம் வழங்கும் விழா முத்தையர் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

பண்ருட்டி ரோட்டரி சங்கம் சார்பில், ரோட்டரி பவுண்டேஷனுக்கு போலியோ தடுப்புக்கான நிதியைத் திரட்டுவதற்கான படிவம் வழங்கும் விழா முத்தையர் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
 பண்ருட்டி ரோட்டரி சங்கத் தலைவர் கோ.காமராஜ் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் பெர்ட்டில்லா நோபர்ட் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் எஸ்.அன்புச்செல்வி கலந்து கொண்டு போலியோ குறித்து விளக்கினார். ரோட்டிரி முன்னாள் ஆளுநர் கே.முத்துக்குமரப்பன், முன்னாள் தலைவர் ஆர்.சந்திரசேகர். தேர்வுத் தலைவர் டி.சண்முகம், ரோட்டரி சங்கச் செயலர் அ.ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 நிகழ்வில் போலியோ தடுப்புக்கான நிதியைத் திரட்டும் விதமாக பள்ளி மாணவர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டன.
 
முழு கட்டுரையைப் படிக்க →