பேருந்து நடத்துநர்களுக்குள் தகராறு: ஒருவர் கைது
குறிஞ்சிப்பாடி அருகே பேருந்து நடத்துநர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கடலூர்பேருந்து நடத்துநர்களுக்குள் தகராறு: ஒருவர் கைது
குறிஞ்சிப்பாடி அருகே பேருந்து நடத்துநர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குறிஞ்சிப்பாடி அருகே பேருந்து நடத்துநர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெரியகாட்டுச்சாகையைச் சேர்ந்தவர் தனராஜ் (30). தனியார் பேருந்து நடந்துநர். இவர், புதன்கிழமை ராமாபுரத்திலிருந்து திருப்பாதிரிபுலியூர் செல்லும் பேருந்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
பேருந்து கடலூர் முதுநகர் பேருந்து நிலையம் வந்திருந்தபோது மற்றொரு தனியார் பேருந்தின் நடந்துநரான கடலூர்
எஸ்.என்.சாவடியைச் சேர்ந்த நடராஜன் (54) என்பவர் ஏறியுள்ளார்.
அவரிடம் பயணச் சீட்டு கேட்டபோது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், தனராஜை நடராஜன் தாக்கியதாகத் தெரிகிறது.
இதுகுறித்து தனராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த திருப்பாதிரிபுலியூர் காவல் துறையினர் நடராஜனை கைது செய்தனர்.