தமிழிசையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பாஜக மாநிலத் தலைவரைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்தமிழிசையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பாஜக மாநிலத் தலைவரைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக மாநிலத் தலைவரைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மெர்சல் திரைப்படம் குறித்து விமர்சனம் தெரிவித்திருந்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செüந்தரராஜனுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பதில் அளித்திருந்தார். அதற்கு பதிலளித்த தமிழிசை, தொல்.திருமாவளவனை தனிப்பட்ட முறையில் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வி.சி.க.வினர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை கடலூர் நீதிமன்றம் எதிரே அக்கட்சியின் வழக்குரைஞர் பிரிவினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் கி.பி.விடுதலை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழிசையின் உருவப் படம் எரிக்கப்பட்டது.
நிர்வாகிகள் இல.திருமேனி, ஏகா.ஆதவன், ப.காத்தவராயன், எம்.எஸ்.அறவாழி, உத்திரவேல், கனகராஜ், விமல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிதம்பரம்: இதேபோல, சிதம்பரம் காந்தி சிலை அருகே கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் பால.அறவாழி தலைமை வகித்தார். நிர்வாகிகள் செல்வ.செல்வமணி, பெரு.திருவரசு, குறிஞ்சிவளவன், க.ஆதிமூலம், பேரறிவாளன், மணிவாசகம், இளம்வழுதி, கீரை அருணன், பூவாலை தமிழ்வாணன், முத்தையன், தீரன், செங்கதிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக கோஷமிட்டு அவரது உருவப் படத்தை எரித்தனர்.
குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி ஒன்றிய, நகர வி.சி.க.வினர் நகரச் செயலர் பாலமுருகன் தலைமையில், ஒன்றியச் செயலர் குரு, துணைச் செயலர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் பேருந்து நிலையம் அருகே தமிழிசையின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.
இதேபோல, குறிஞ்சிப்பாடி நான்கு முனைச் சந்திப்பில் வடலூர் நகரச் செயலர்கள் ஜோதிமணி, கண்ணன் ஆகியோர் தலைமையில், ஒன்றியச் செயலர் சிவசக்தி முன்னிலையில் 30-க்கும் மேற்பட்டோர் தமிழிசையின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர். இதேபோல, பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரே நகரச் செயலர் கார்த்திகேயன் தலைமையில் வி.சி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.