எரியாத தெரு விளக்குகள்: மின் கம்பங்களில் ஏற்றப்பட்ட தீப் பந்தம்
மணம்தவிழ்ந்தபுத்தூர் ஊராட்சியில் தெரு விளக்குகள் எரியாததால், கிராம மக்கள் மின் கம்பங்களில் தீப் பந்தங்களை ஏற்றி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
மணம்தவிழ்ந்தபுத்தூர் ஊராட்சியில் தெரு விளக்குகள் எரியாததால், கிராம மக்கள் மின் கம்பங்களில் தீப் பந்தங்களை ஏற்றி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
பண்ருட்டி ஒன்றியம், மணம்தவிழ்ந்தபுத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட மணம்தவிழ்ந்தபுத்தூர், பலாப்பட்டு, மேல்அருங்குணம், பொண்ணங்குப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள தெருக்களில் பல மாதங்களாக தெருவிளக்குகள் எரியவில்லையாம்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லையாம். மேலும், அரசூர் சாலையில் உள்ள மின் விளக்குகள் எரியாத காரணத்தால், அங்கு போலீஸார் அமைத்துள்ள தடுப்புக் கட்டையின் மீது மோதி வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனராம். இதனால், பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தெரு விளக்குகளைச் சீரமைத்து பராமரிக்க வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை இரவு வீதிகளில் உள்ள மின் கம்பங்களில் தீப் பந்தங்களை ஏற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.