மக்கள் சமூக நீதிப் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலா ண்மை வாரியம் அமைக்கக் கோரி, வேப்பூரில் மக்கள் சமூக நீதிப் பேரவையினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலா ண்மை வாரியம் அமைக்கக் கோரி, வேப்பூரில் மக்கள் சமூக நீதிப் பேரவையினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வேப்பூர் சந்திப்புச் சாலையில் மக்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் தெய்வசிகாமணி தலைமை வகிக்க, மாநில விவசாய அணிச் செயலர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்ட தொடக்க உரையை மாநில துணைச் செயலர் துரைசாமியும், மாநில பொதுச் செயலர் முத்துசாமி கண்டன உரையும் ஆற்றினர்.
மாவட்டச் செயலர் பிரபு, நிர்வாகிகள் நாராயணன், குமரவேல், முத்துக்கண்ணன், மருதமுத்து சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி நன்றி கூறினார்.