கடலூர்

குடிநீர்ப் பிரச்னை: விருத்தாசலம் நகராட்சி அலுவலகம் முற்றுகை 

தினமணி

குடிநீர் வழங்கக் கோரி விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை பெண்கள் முற்றுகையிட்டனர்.
 விருத்தாசலம் நகராட்சிக்கு உள்பட்ட திருவள்ளுவர் நகரில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியினருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்ததைத் தொடர்ந்து, குடிநீர் விநியோகம் கடந்த சில நாள்களாக தடைபட்டுள்ளதாம். இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
 இதையடுத்து திங்கள்கிழமை 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நகராட்சி அலுவலகத்துக்கு காலிக் குடங்களுடன் வந்து முற்றுகையிட்டனர்.
 அவர்களிடம் நகராட்சி குடிநீர் வழங்கல் பிரிவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அடுத்த ஓரிரு நாள்களில் சீராகக் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததன் பேரில் பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT