மகளிர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
கடலூரில் மகளிர் காங்கிரஸார் வாயில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூரில் மகளிர் காங்கிரஸார் வாயில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்டார். அதேபோல உத்தரப் பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுமியை ஆளும் கட்சிப் பிரமுகர் பாலியல் வன்முறைக்கு உள்படுத்தியதாக கைது செய்யப்பட்டார்.
இந்தச் இரு சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடலூரில் மகிளா காங்கிரஸ் சார்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கலைச்செல்வி தலைமை வகித்தார்.
மாநிலச் செயலர் மங்கலட்சுமி, மாவட்ட நிர்வாகிகள் அமுதா, லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஏ.எஸ்.சந்திரசேகரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட இளைஞரணிச் செயலர் கே.கலையரசன், தொழில்சங்கச் செயலர் டி.ராம்ராஜ், மீனவரணிச் செயலர் கார்த்தி, வட்டத் தலைவர் ராஜாராமன், நகரச் செயலர் உமாபதி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.